Powered By Blogger

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

மே தினம்!




 







மே தினமே வா


இன்னமும் இங்கே

உழைக்கும் கைகளின்‌ 

விலங்குகள் உடைபடவில்லை


சிந்தனைச் சிறகுகளின்

அடிமைச்சங்கிலி உடைபடவில்லை


உழைக்கும் மக்களின்

வறுமைக்கோடு உடைபடவில்லை


மே தினமே வா


உரிமை கேட்கும்

விடுதலைக் குயில்களோடு வா


இழந்தவை மீட்கும்

புரட்சி விரல்களோடு வா


ஆதிக்க நெருப்பை 

ஊதி அணைக்கும்‌

ஊழிக்காற்றாக வா


ஓங்கிய கரங்களின்

வலிமைக்குரலாக 

வா வா வா மே தினமே!





வியாழன், 6 ஏப்ரல், 2023

உச்சகட்டம்

  









மரங்களே 

என்ன இப்படி கிளம்பி விட்டீர்கள்?


காடு அழிக்கும் கயவர்

கண்டு அச்சமா?


கால நிலை மாற்ற துயரம்

கண்டு அச்சமா?


நீர் உறிஞ்சு மூடர் 

கண்டு அச்சமா?


நீர் போனால் எதுவும்

இங்கு மிஞ்சுமா?


மரங்களே 

என்ன இப்படி கிளம்பி விட்டீர்கள்?


கிளைகளை வேர்களாக்கி

நிலவில் குடியேற திட்டமா?


கெட்டழிந்தும் திருந்தாத

மனிதனைப் பழிவாங்கும் கட்டமா?